தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள் 'மாஜி' எம்.பி., மீது வழக்கு
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள் 'மாஜி' எம்.பி., மீது வழக்கு
ADDED : ஏப் 11, 2026 04:02 AM
வேலுார்: தேர்தல் பிரசாரத்தில், சிறுவர்களை ஈடுபடுத்தியதாக தி.மு.க., வேலுார் முன்னாள் எம்.பி., முகமது சகி மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வேலுார் தொகுதி தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., கார்த்திகேயனுக்கு ஓட்டு கேட்டு, வேலுார் மாவட்ட தி.மு.க., அவை தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான முகமது சகி கடந்த வாரம் சத்துவாச்சாரி, வெங்கடாபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், சிறுவர்களை கட்சி கொடி மற்றும் ' வாக்களிப்பீர் உதயசூரியன், நம் வேட்பாளர் கார்த்திகேயன்' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளுடன், பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து, நம் நாளிதழில், 4ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, பறக்கும் படையை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம், சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். குழந்தை தொழிலாளர் நலச்சட்டத்தின் கீழ், முகமது சகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
