/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
/
நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
ADDED : ஜன 07, 2024 01:47 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், சேண்பாக்கத்தை சேர்ந்தவர் அஜீத்குமார், 24. இவரது நண்பர் சுகுமார், 26. அஜீத்குமார், திருநங்கை ஒருவருடன் திரிந்து வந்தார். இதை சுகுமார், கேலியும் கிண்டலும் செய்து வந்தார்.
கடந்த, 2021 ஏப்., 12ல், சுகுமார் கேலி செய்தபோது, ஆத்திரமடைந்த அஜீத்குமார், அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். வேலுார் வடக்கு போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர்.
வேலுார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சாந்தி வழக்கை விசாரித்து, நண்பரை கொன்ற அஜீத்குமாருக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கியதற்கு ஓராண்டு சிறை, 500 ரூபாய் அபராதம் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.