/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
50 அடி பள்ளத்தில் உருண்ட சரக்கு லாரி: டிரைவர் படுகாயம்
/
50 அடி பள்ளத்தில் உருண்ட சரக்கு லாரி: டிரைவர் படுகாயம்
50 அடி பள்ளத்தில் உருண்ட சரக்கு லாரி: டிரைவர் படுகாயம்
50 அடி பள்ளத்தில் உருண்ட சரக்கு லாரி: டிரைவர் படுகாயம்
ADDED : நவ 24, 2025 12:35 AM

பேரணாம்பட்டு: வேலுார் அருகே, மலைப்பாதையில் சென்ற சரக்கு லாரி, பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் காயமடைந்தார்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலை கிராமம் வழியாக நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், பெங்களூருவிலிருந்து, சென்னைக்கு அலுமினியம் லோடு ஏற்றிய லாரி சென்றது. திருப்பத்துார் மாவட்டம், ஒடுகத்துாரை சேர்ந்த பிரகாசம், 26, என்பவர் ஓட்டி சென்றார்.
மலைப்பாதையின், 5வது வளைவில் லாரி சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பிரகாஷ், காயத்துடன் தப்பினார். பேரணாம்பட்டு போலீசார், லாரியை, கிரேன் மூலம் மீட்டு, விசாரிக்கின்றனர்.