தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ மழைக்கு ஒதுங்கியவர் குளவி கடித்ததில் பலி

மழைக்கு ஒதுங்கியவர் குளவி கடித்ததில் பலி

மழைக்கு ஒதுங்கியவர் குளவி கடித்ததில் பலி


ADDED : அக் 07, 2025 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார் : காட்பாடி அருகே குளவி கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் பாக்கியம்மாள், 70. இவர் சேனுாரிலிருந்து ஜாப்ராபேட்டைக்கு, நேற்று முன்தினம் மாலை நடந்து சென்றார். அப்போது மழை பெய்ததால், ஜாப்ராப்பேட்டை சர்ச் அருகே மரத்தடியில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு கூடு கட்டி இருந்த குளவிகள், பாக்கியம்மாளை கடித்ததாக கூறப்படுகிறது. அதில் காயம் அடைந்தவர், மயங்கி விழுந்தார்.

பிரம்மபுரம் போலீசார், பாக்கியம்மாளை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us