/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தீபாவளிக்கு ஊருக்கு சென்றவர் விபத்தில் பலி
/
தீபாவளிக்கு ஊருக்கு சென்றவர் விபத்தில் பலி
ADDED : அக் 19, 2025 02:18 AM
வேலுார்: தீபாவளிக்கு டூ - வீலரில் சொந்த ஊருக்கு சென்ற ஐ.டி., ஊழியர் விபத்தில் உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், கடம்பத்துாரை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் சதீஷ், 23; சென்னை ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தார். தீபாவளி விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு டூ - வீலரில், நேற்று முன்தினம் அதிகாலை சென்று கொண்டிருந்தார்.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சேண்பாக்கம் மேம்பாலத்திற்கு முன்பாக பெட்ரோல் பங்க் அருகே சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கம் எதிர்பாராத விதமாக மோதினார்.
இதில், பலத்த காயமடைந்த சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.