/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஜி.எச்.,ல் பிரசவத்தில் தாய், சேய் பலி
/
ஜி.எச்.,ல் பிரசவத்தில் தாய், சேய் பலி
ADDED : டிச 18, 2024 02:58 AM
வேலுார்:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன், 29 போலீஸ்காரர். இவரது மனைவி அனிதா, 24. நிறைமாத கர்ப்பிணியான இவர், டிச.,12ம் தேதி, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது கோடீஸ்வரன், தன் மனைவிக்கு டாக்டர்கள் குறித்து கொடுத்த பிரசவ தேதி கடந்து விட்டது. எனவே, சிசேரியன் செய்து, பிரசவம் பார்க்கும்படி அங்குள்ள டாக்டர்களிடம் கூறினார்.
ஆனால், டாக்டர்கள் அலட்சியம் செய்து வந்த நிலையில்,டாக்டர்கள் பிரசவம் பார்க்க துவங்கியதாகவும், அப்போது, குழந்தை இறந்து பிறந்த நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு தாயும் உயிரிழந்தார்.
இதனால், டாக்டர்களின் அலட்சியத்தால் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர் என, கோடீஸ்வரன், போலீசில் புகார் அளித்தார். வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.