தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

சிறுத்தை நடமாட்டத்தால் பீதி


ADDED : செப் 29, 2024 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2024 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார், : வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த பஞ்.,ல் உள்ள பூங்குளம், ரங்கசமுத்திரம், ஏரிக்கொல்லை, நாலுகல் மலை, சேம்பள்ளி, சானாங்குட்டை, நலங்காநல்லுாரை சேர்ந்த விவசாயிகள், தங்கள் கால்நடைகளை பூங்குளம் கல்லப்பாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்வர்.

கடந்த மாதம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின், 3 ஆடுகளை, சிறுத்தைகள் கடித்து கொன்றன. அதேபோன்று ஆண்டிகான்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவருடைய, 2 ஆடுகளை கொன்றன.

நேற்று முன்தினம் மாலை பூங்குளம் மலைப்பகுதியில் தன் குட்டிகளுடன் சிறுத்தைகள், சர்வ சாதாரணமாக சுற்றி வந்தது. இதை கண்ட கிராம மக்கள் பீதியில் வீடு திரும்பினர். கிராம மக்கள் இரவில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, சுற்றி திரியும் சிறுத்தைகளை பிடித்து, வனப்பகுதியில் விட, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us