/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
அரசு நிலத்தை 14 பேருக்கு பத்திரம் பதிந்து கொடுத்த பதிவாளர் கைது
/
அரசு நிலத்தை 14 பேருக்கு பத்திரம் பதிந்து கொடுத்த பதிவாளர் கைது
அரசு நிலத்தை 14 பேருக்கு பத்திரம் பதிந்து கொடுத்த பதிவாளர் கைது
அரசு நிலத்தை 14 பேருக்கு பத்திரம் பதிந்து கொடுத்த பதிவாளர் கைது
ADDED : டிச 30, 2024 11:38 PM

காட்பாடி: வேலுார் மாவட்டம், காட்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில்தணிக்கை துறையினர் நடத்திய ஆய்வில், போலி ஆவணங்கள் வாயிலாக, அரசு நிலத்தை தனி நபர்களுக்கு பதிவு செய்து கொடுத்ததும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்து கொடுத்ததாகவும், அப்போதைய சார் - பதிவாளர் சிவக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை, பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சிவக்குமாரை கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்து, ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரசு நிலத்தை தனி நபர்களுக்கு பதிவு செய்து கொடுத்த சார் - பதிவாளர் சிவக்குமார் மீது, விஜிலென்ஸ் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான, 106 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை, 14 பேருக்கு பதிவு செய்து கொடுத்தும், இதற்கு லஞ்சமாக பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.