/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
அரசுக்கு எதிராக கருத்து பதிவு; போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
அரசுக்கு எதிராக கருத்து பதிவு; போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
அரசுக்கு எதிராக கருத்து பதிவு; போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
அரசுக்கு எதிராக கருத்து பதிவு; போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 01, 2025 01:07 AM
வேலுார் : வேலுார், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக அன்பரசன், 50, பணிபுரிந்து வந்தார். இவர், தன் முகநுால் பக்கத்தில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில், தி.மு.க., அரசுக்கு எதிராக, கருத்துப்பதிவு ஒன்றுக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், கமென்ட் பாக்சில், ஆட்சேபகரமான விதத்தில் கருத்து பதிவிட்டார்.
இதுகுறித்து வேலுார் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., மதிவாணன் விசாரணை நடத்தி, அன்பரசன் கருத்து தெரிவித்த விவகாரம், சீருடைப்பணி விதிகளுக்கு எதிரானது எனக் கூறி, அவரை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும், முகநுால் பக்கத்தில் அவரது கருத்து நீக்கப்பட்டது.