தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ 'துாய்மை பணியாளர்கள் மலக்குழியில் இறங்காதீர்'

 'துாய்மை பணியாளர்கள் மலக்குழியில் இறங்காதீர்'

 'துாய்மை பணியாளர்கள் மலக்குழியில் இறங்காதீர்'


ADDED : ஜன 29, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்: 'அதிக பணம் கொடுத்தாலும், மலக்குழியில் துாய்மை பணியாளர்கள் இறங்கக் கூடாது' என, துாய்மை பணியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், வேலுார் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலுார் நாதன் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்தில், துாய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க கூறுகையில், 'எங்களுக்கு காலை உணவு வேண்டாம்; பணி நிரந்தரம் தான் வேண்டும். உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு, முழு சம்பளத்தை வழங்குங்கள். 'தாட்கோவில் கடன் வழங்க, அதிகாரிகள் முன்வருவதில்லை. இரண்டு, மூன்று டிகிரி முடித்து, வேலை இல்லாமல் இருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு, வேலை வாங்கி தர வேண்டும். கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்' என்றனர்.

துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கூறுகையில், ''உங்களுக்கு அதிக பணம் கொடுத்தாலும், மலக்குழியில் இறங்க வேண்டாம்; அது மலக்குழி அல்ல; மரணக்குழி. இயந்திரங்கள் உதவியுடன் தான் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் கையுறைகள் மற்றும் தின கூலி, 410 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us