/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
திருமணத்தில் அக்கா மாயம் திடீர் மணமகளானார் தங்கை
/
திருமணத்தில் அக்கா மாயம் திடீர் மணமகளானார் தங்கை
ADDED : நவ 08, 2024 02:15 AM
வேலுார்:வேலுார் மாவட்டம் கணியம்பாடி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 21 வயது பெண்ணுக்கும், 27 வயது வாலிபருக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் மணப்பெண் திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர் புகார்படி, வேலுார் தாலுகா போலீசார், மணப்பெண்ணை தேடினர்.
இதற்கிடையே மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தொடர்ந்து மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோரிடம், அவர்களது, 19 வயதான இரண்டாவது மகளை திருமணம் செய்து தரும்படி கேட்க, அவர்களும் சம்மதித்தனர்.
பின் நிச்சயிக்கப்பட்டபடி மணமகனுக்கும், மாயமான பெண்ணின் தங்கைக்கும் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது.