ADDED : ஜன 18, 2026 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னை: வேலுார் அருகே தந்தையை அடித்து கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், ஜங்கால் பள்ளியை சேர்ந்தவர், விவசாயி கிருஷ்ணசாமி, 70, இவரது மகன் எத்திராஜ், 39, மது போதைக்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டிற்கு வந்த எத்திராஜை, கிருஷ்ணசாமி கண்டித்தார். இதில், ஆத்திரமடைந்த எத்திராஜ், கட்டையால், கிருஷ்ணசாமியின் தலையில் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். மேல்பாடி போலீசார், எத்திராஜை கைது செய்தனர்.

