ADDED : ஏப் 20, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் அருகே முட்புதரில், உடலில் காயங்களுடன் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், பாக்கம்பாளையம் பஞ்.,க்குட்பட்ட ஓட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன், 65. இவர், நேற்று முன்தினம் இரவு கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று அதிகாலை, அப்பகுதியில் சாலையோரம் முட்புதரில் அவரது சடலம் கிடந்துள்ளது. வேப்பங்குப்பம் போலீசார் சென்று பார்த்தபோது, நாகப்பன் இறந்து கிடந்த சாலையின் அருகே ரத்தக்கறை அதிகமாக இருந்தது.
அவரது உடலில் பலத்த காயம் இருந்தது. நாகப்பனை யாராவது அடித்து கொலை செய்து, சடலத்தை முட்புதரில் வீசி சென்றனரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

