தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ பாதியில் பழுதாகி நின்ற 'லிப்ட்'

பாதியில் பழுதாகி நின்ற 'லிப்ட்'

பாதியில் பழுதாகி நின்ற 'லிப்ட்'


ADDED : ஏப் 18, 2025 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்:வேலுார் மாநகராட்சி அலுவலகத்தில், 'லிப்ட்' பாதி வழியில் நின்றதால், அதில் சிக்கியோர் அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார், இன்பான்டரி சாலையிலுள்ள வேலுார் மாநகராட்சி அலுவலகத்தில், 3 அடுக்கு மாடி கட்டடத்துடன், வரி கட்டுதல், இ-சேவை மையம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம், மாநகராட்சி கமிஷனர் அலுவலகம், கூட்டரங்கு இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், 3 அடுக்கு மாடிக்கு, 'லிப்ட்' வசதி உள்ளது.

நேற்று, மாநகராட்சி அவசர கூட்டம் நடந்த நிலையில், கவுன்சிலர்கள், கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். 'லிப்ட்'ல் அனைவரும் ஏறி சென்றனர். அதிக ஆட்கள் ஏறியதால், நடு வழியில், 'லிப்ட்' நின்றது. அதிலிருந்தோர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

பின்னர், ‍வேலுார் தீயணைப்பு துறை வீரர்கள் வரைவழைக்கப்பட்டு அவசரகால வழியில் மீட்டனர். இதனால், லிப்டில் சிக்கி மீண்டோர் நிம்மதியடைந்தனர். இச்சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us