ஜாலியாக இருக்க ஆடு திருட்டு மாணவர்கள் உட்பட மூவர் கைது
ஜாலியாக இருக்க ஆடு திருட்டு மாணவர்கள் உட்பட மூவர் கைது
ADDED : செப் 05, 2026 03:23 AM

காட்பாடி: ஜாலியாக இருக்க ஆடுகள் திருடி விற்ற நர்சிங் கல்லுாரி மாணவர்கள் கணேஷ், 23, சாம்சரண் ராஜ், 20, உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், கிளித்தான் பட்டறையில் ஒரு வீட்டின் பின்புற பட்டியில் அடைக்கப்பட்ட, 12 ஆடுகள் தொடர்ந்து திருடு போயின. நேற்று முன்தினம் நள்ளிரவு, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர், டூ - வீலரில் வந்து, வீடு வீடாக நோட்டமிட்டனர். அப்பகுதி வாலிபர்கள் விரட்டி சென்றதில், ஒருவர் பிடிபட்டார். அவரை, சரமாரியாக தாக்கி, காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கணேஷ் என்பதும், வேலுார் தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்து வருவதும், ஆடு திருட வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, கணேஷ், தப்பி ஓடிய சாம்சரண் ராஜ், மற்றும் திருடிய ஆட்டை வாங்கிய கறிக்கடைக்காரர் முருகன், 44, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
