/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கணவர் விஷத்தழையை தின்றதால் அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
/
கணவர் விஷத்தழையை தின்றதால் அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
கணவர் விஷத்தழையை தின்றதால் அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
கணவர் விஷத்தழையை தின்றதால் அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
ADDED : ஜன 18, 2024 02:06 PM
குடியாத்தம் : குடியாத்தம் அருகே, குடும்ப தகராறில், கணவர் விஷத்தழை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால், அதிர்ச்சியில் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் மாவட்டம், மோர்தானா அடுத்த போர்தானாவை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ், 26; இவர் மனைவி சவுமியா, 21; இவர்களுக்கு, 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது சவுமியா, 5 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த, 14ம் தேதி குடியாத்தம் சென்று, பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவது தொடர்பாக, தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த சுரேஷ், விஷத்தழையை தின்று தற்கொலைக்கு முயற்சித்தார். இதில், அதிர்ச்சியடைந்த சவுமியா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.