/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாநகராட்சி லாரியில் சிக்கி பெண் பலி
/
மாநகராட்சி லாரியில் சிக்கி பெண் பலி
ADDED : டிச 17, 2024 07:16 AM
வேலுார்; வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த பெரிய பாலம்பாக்கத்தை சேர்ந்தவர் அஸ்வினி, 28; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை பணிக்கு செல்ல, தன் சகோதரர் பிரபாகரன், 25, என்பவருடன் ஹோண்டா பைக்கில் சென்றார்.
காட்பாடி தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே, கழிவு நீர் கால்வாய் அமைக்க சாலை நெடுகிலும் கொட்டப்பட்டுள்ள மண்ணில், பிரபாகரன் ஓட்டி சென்ற பைக் நிலை தடுமாறியதில், இருவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது, பின்னால் வந்த மாநகராட்சி தண்ணீர் லாரி, அஸ்வினி தலை மீது ஏறியதில், தலை நசுங்கி பலியானார். பிரபாகரன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கால்வாய் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இதே பகுதியில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.