/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாணவிக்கு பிறந்த குழந்தை போக்சோவில் வாலிபர் கைது
/
மாணவிக்கு பிறந்த குழந்தை போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜூலை 22, 2025 02:14 AM
வேலுார், வேலுார் அருகே, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக, வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், அலமேலு ரங்காபுரத்தை சேர்ந்தவர் பைரோஸ், 22. இவர், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியை, கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். இந்நிலையில் பைரோஸ் ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி மாணவியுடன் தனிமையில் இருந்ததில், மாணவி கர்ப்பமானார். நேற்று முன்தினம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் படி, வேலுார் அனைத்து மகளிர் போலீசார், பைரோஸ் மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.