/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி
/
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி
ADDED : ஜூலை 13, 2011 01:06 AM
செஞ்சி : தீவிபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு உதவித்தொகையை எம்.எல்.ஏ., வழங்கினார்.
செஞ்சி தாலுகா புலிவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (65). ஆடு வளர்த்து வருகிறார். கடந்த 10ம் தேதி இவர் வீட்டு கூரையில் தீ பிடித்தது. அருகில் இருந்த லோகாம்பாள் (60), எட்டியான் (65) ஆகியோரின் கூரை வீடுகளும் தீ பரவியது. இதில் மூன்று வீடுகளும் எரிந்து சாம்பலானது. வீட்டின் அருகே கட்டியிருந்த ராமசாமிக்கு சொந்தமான 7 வெள்ளாடுகளும் தீயில் கருகி இறந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை தலா 5,000 ரூபாய் மற்றும் பொருட்களை எம்.எல்.ஏ., கணேஷ் குமார் வழங்கினார். தாசில்தார் பரந்தாமன், மண்டல துணை தாசில்தார் பூமிநாதன், வருவாய் அலுவலர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா, வி.ஏ.ஓ., மதியழகன் உடனிருந்தனர்.