/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
/
நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
ADDED : செப் 01, 2024 05:00 AM

விழுப்புரம் : சென்னை - நாகர்கோவில் நோக்கிச் செல்லும் வந்தே பாரத் புதிய ரயிலுக்கு, விழுப்புரத்தில் ரவிக்குமார் எம்.பி., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கான துவக்க விழா நேற்று நடந்தது. இந்த ரயில், நேற்று மதியம் 3:35 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்திற்கு வந்தடைந்தது. ரவிக்குமார் எம்.பி., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் செல்வம், வணிக மேலாளர் மோகனபிரியா பங்கேற்றனர். வந்தே பாரத் ரயில் மீண்டும் 3:50 மணிக்கு புறப்பட்டு சென்றது.