/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
/
காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
ADDED : செப் 04, 2024 11:12 PM
திண்டிவனம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டிவனம் வழக்கறிஞர் சங்க தலைவர் சண்முகம் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்கூட்டம் நடந்தது. இதில் திண்டிவனத்திலுள்ள நான்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது'' என்று தெரிவித்துள்ளனர்.