/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாணக்யா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
/
சாணக்யா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
சாணக்யா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
சாணக்யா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
ADDED : மே 07, 2024 05:59 AM

திண்டிவனம் திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள் 145 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் முறையே மாணவி ஷர்மிளா 600க்கு 570, கஜலட்சுமி 564, மாணவர் பிரதீப் 560, ஹரீஷ்வர் 559 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
550க்கு மேல் 10 பேர், 500க்கு மேல் 43 பேர், 400க்கு மேல் 40 பேர், 350க்கு மேல் 2 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
கணினி பயன்பாடு பாடப்பிரிவில் 4 மாணவர்களும், கணினி அறிவியலில் 3 மாணவர்களும், வணிகவியலில் 2 மாணவர்களும், கணக்கு பாடத்தில் ஒருவர் என 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
முதல் நான்கு இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் தேவராஜ் பாராட்டி கவுரவித்தார். பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 11ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறுவதாக, பள்ளியின் தாளாளர் தெரிவித்தார்.