/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கென்னடி மெட்ரிக் பள்ளி பிளஸ் 1ல் 100 சதவீதம் தேர்ச்சி
/
கென்னடி மெட்ரிக் பள்ளி பிளஸ் 1ல் 100 சதவீதம் தேர்ச்சி
கென்னடி மெட்ரிக் பள்ளி பிளஸ் 1ல் 100 சதவீதம் தேர்ச்சி
கென்னடி மெட்ரிக் பள்ளி பிளஸ் 1ல் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 16, 2024 11:13 PM

திண்டிவனம்: ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 113 மாணவ, மாணவியர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவி பத்மபூர்வஜா 600க்கு 590, ஹேமலதா 572, பாக்கியலட்சுமி 566 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
மாணவி பத்மபூர்வஜா திண்டிவனம் மற்றும் செஞ்சி கல்வி மாவட்டத்தில் முதலிடமும், விழுப்புரம் மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துஉள்ளார்.
மேலும், 500 மதிப்பெண்ணுக்க மேல் 47 பேர், 550க்கு மேல் 5 பேர், 450க்கு மேல் 26 பேர் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை, தாளாளர் சண்முகம், இயக்குனர் வனஜா, செயலாளர் சந்தோஷ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.