/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு இருசக்கர வாகன ஊர்வலம்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு இருசக்கர வாகன ஊர்வலம்
ADDED : ஏப் 04, 2024 01:00 AM

செஞ்சி: செஞ்சியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு குறைவாக உள்ள நகராமாக செஞ்சி உள்ளது. இங்கு சராசரியாக 63 சதவீதம் ஓட்டே பதிவாகி வருகிறது. இந்த சதவீதத்தை உயர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை வருவாய்த்துறையினர் எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருவாய்த்துறை சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தினர்.
தாசில்தார் ஏழுமலை தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி, டி.எஸ்.பி., கவினா ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். மேல்மலையனுார் தாசில்தார் முகமது அலி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் செல்வக்குமார், துரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
ஆதி திராவிடர் நல தாசில்தார் புஷ்பாவதி, தேர்தல் துணை தாசில்தார்கள் மணிகண்டன், சார்லின், தேர்தல் உதவியாளர்கள் சரவணன், செல்வம், ஆர்.ஐ.,க்கள் பழனி, முருகன் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள். கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

