/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100
/
சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100
சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100
சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100
ADDED : மே 10, 2024 09:23 PM

செஞ்சி: செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 193 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி ரம்யா, மாணவர்கள் கோபிநாத், சித்தார்த் ஆகியோர் 500க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவிகள் ஹேமலதா, பொன் பிரியதர்ஷினி ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் கீதாஞ்சலி, ஹரிணி, காஞ்சனா, காவியாஸ்ரீ, வர்ஷினி, மாணவன் பிரஜன் ஆகிய 6 பேர் 492 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
பள்ளியில் கணிதத்தில் 100 பேர், அறிவியலில் 20 பேர், சமூக அறிவியலில் 6 பேர் 100க்கு 100 மதிப்பெண்ணும், தமிழில் 2 மாணவர்களும், ஆங்கிலத்தில் 11 மாணவர்களும் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். 470 மதிப்பெண்ணுக்கு மேல் 29 பேர், 450க்கு மேல் 130 பேர் பெற்றனர்.
முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளை தாளாளர் கலைச்செல்வன் பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் சிவசங்கரி, நிர்வாக அலுவலர் அருள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடன் இருந்தனர்.