/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் ரூ.10.55 லட்சம் நலநிதி

ADDED : மே 30, 2024 05:19 AM

விழுப்புரம்: விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு, சக காவலர்கள் சார்பில் திரட்டிய ரூ.10.55 லட்சம் நல நிதி உதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் தாலுகா கோவில்பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் சந்தோஷ்குமார். இவர், கடந்த 2017ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்து, திருவாரூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த டிச.30 ம் தேதி நடந்த வாகன விபத்தில் அவர் இறந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு காவல் துறை காக்கும் உறவுகள் சார்பில், கடந்த 2017ம் ஆண்டு பேட்சை சேர்ந்த, அனைத்து மாவட்ட காவல்துறையினர் சார்பில் நிதி திரட்டி, சந்தோஷ்குமார் குடும்பத்திற்கு ரூ.10.55 லட்சம் நல நிதியாக வழங்கியுள்ளனர்.
இதற்காக விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சந்தோஷ்குமாரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள் வழங்கிய நல நிதி ரூ.10.55 லட்சத்தை, அவரது தந்தை காசி, தாய் கலைவாணி, மகன் ரட்சகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு, எஸ்.பி.,தீபக்சிவாச் வழங்கினார். சக காவலர்கள் உடனிருந்தனர்.