/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது ஒலிபெருக்கி தேர்தல் பிரசாரத்தால் இடையூறு
/
10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது ஒலிபெருக்கி தேர்தல் பிரசாரத்தால் இடையூறு
10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது ஒலிபெருக்கி தேர்தல் பிரசாரத்தால் இடையூறு
10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது ஒலிபெருக்கி தேர்தல் பிரசாரத்தால் இடையூறு
ADDED : மார் 27, 2024 07:20 AM
விழுப்புரம் : மாவட்டத்தில் நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 24 ஆயிரத்து 528 மாணவ, மாணவியர்கள் எழுதினர். தேர்தல் ஒலிப்பெருக்கி பிரசாரத்தால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதால் அரசியல் கட்சியினர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து, தீவிர பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் பரபரப்புக்கிடையே பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்தது. அப்போதெல்லாம் அரசியல் கட்சியினர், கூட்டணி அமைப்பதில் மும்முரமாக இருந்ததால், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு ஓரளவுக்கு இடையூறின்றி நடந்து முடிந்தது.
தற்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. வரும் ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது. விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 68 மையங்களிலும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 மையங்களிலும் தேர்வுகள் நடக்கிறது. 24 ஆயிரத்து 528 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10:00 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1:00 மணி வரை நடக்கிறது.
தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 2,021 பேரும், பறக்கும் படையில் 167 பேரும், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சொல்வதை எழுதும் பணிக்கு 466 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி, மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பதும், ஒலிபெருக்கிகள் மூலம் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்வதும், பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதும் என பரபரப்பாகியுள்ளனர்.
இந்த பிரசாரத்தால், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவ்வப்போது இடையூறுகள் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தேர்வு மையங்கள் பெரும்பாலும் நகர பகுதிகளும், நெடுஞ்சாலையில், மக்கள் சந்திக்கும் பகுதிகளில் உள்ளது.
இதனால், அரசியல் கட்சி பிரசாரங்களும் அந்த வழியில் தான் இருக்கிறது. தேர்வு நடைபெறும் நேரத்தில், ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தத்துடன் பிரசார வாகனங்கள் செல்வது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு, தீவிர பிரசாரம் நடைபெறும் நாட்களில் நடப்பதால் மாணவர்களின் நலன் கருதி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ள இடங்களில் மட்டும் ஒலிபெருக்கியை பயன்படுத்தாமல் இருக்க தேர்தல் காண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

