/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.1.26 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை
/
ரூ.1.26 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை
ADDED : மே 11, 2024 04:40 AM
விழுப்புரம்: கடன் தருவதாகக் கூறி, விவசாயியிடம் ரூ.1.26 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேல்மலையனுார் அடுத்த கோலப்பனுாரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்,56; விவசாயி. இவரை கடந்த 30ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், கடன் பெற வங்கி விபரங்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப கூறினார்.
அதனை நம்பிய சுப்ரமணியன், தனது ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி பாஸ்புக் நகல்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார்.
அதன் பின் தொடர்பு கொண்ட மர்ம நபர், ரூ. 7 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கான ப்ராசசிங் பீஸ், டாக்குமெண்ட் சார்ஜ், ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்த கூறினார். அதனை நம்பி சுப்ரமணியன் ரூ.1.26 லட்சத்தை செலுத்தினார்.
அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.