/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'ஏசி' மெக்கானிக் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை
/
'ஏசி' மெக்கானிக் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை
ADDED : ஆக 04, 2024 04:30 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் 'ஏசி' மெக்கானிக் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேடு, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 47; 'ஏசி' மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி கொண்டு, சொந்த ஊரான வளவனுார் அடுத்த குடுமியாங்குப்பம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றார்.
நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 5,000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.