/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.19 லட்சம் மோசடி
/
டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.19 லட்சம் மோசடி
ADDED : செப் 03, 2024 06:48 AM
விழுப்புரம் : டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.19 லட்சம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேட்டை சேர்ந்தவர் சக்தி வேல் மகன் வினோத்குமார், 38; டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதிநேர பணியாக தான் அனுப்பும் டாஸ்கை முடித்தால் வருவாய் ஈட்டலாம் எனக் கூறினார்.
இதை நம்பி, வினோத்குமார், மர்ம நபர் கூறியபடி டாஸ்கை முடித்து 4,370 ரூபாய் பெற்றார்.
பின், டெலிகிராம் ஐ.டி., மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வினோத்குமாரிடம் சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால், கூடுதல் லாபம் பெறலாம் எனக்கூறினார்.
அதனை நம்பிய வினோத்குமார், மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.19 லட்சத்தை அனுப்பி, டாஸ்க் முடித்தார். ஆனால், பணம் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.