ADDED : ஜூன் 28, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் நகரப்பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதன் பேரில் நேற்று மாலை 4.30 மணியளவில் டவுன் போலீசார் சேடன்குட்டை எம்.ஆர்.எஸ்.தியேட்டர் அருகே ரோந்தில் இருந்தனர்.
அப்போது, தீர்தக்குளத்தை சேர்ந்த ஜானகிராமன் மகன் சஞ்சய் என்கிற வேணுகோபால், 23, ரோஷணை பாட்டையை சேர்ந்த ஆதிமூலம் மகன் ஹாலன், 24; ஆகிய இருவரும் 60 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.
பிடிபட்ட இருவரையும் டவுன் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.