/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 பைக்குகள் மோதல்; வானுார் சர்வேயர் பலி
/
2 பைக்குகள் மோதல்; வானுார் சர்வேயர் பலி
ADDED : மார் 21, 2024 11:49 AM

வானுார்,: வானுார் அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் சர்வேயர் இறந்தார்.
செஞ்சி அடுத்த தளவாளப்பட்டு, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தேவராஜ், 27; வானுார் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகவில்லை.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சென்றவர் பின், மயிலம் ரோடு வழியாக வீட்டிற்கு, பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
தனியார் வாட்டர் கம்பெனி அருகே சென்றபோது, எதிரே சேதராப்பட்டு காலனியைச் சேர்ந்த சரத், 48; என்பவர் ஓட்டி வந்த யமாகா பைக், தேவராஜ் மீது மோதியது. இதில், தேவராஜ் படுகாயமடைந்தார். சரத் காயமின்றி தப்பினார்.
படுகாயமடைந்த தேவராஜை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

