/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேற்று 2 வேட்பாளர்கள் மனு தாக்கல்
/
நேற்று 2 வேட்பாளர்கள் மனு தாக்கல்
ADDED : மார் 27, 2024 07:36 AM

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் அறிவிக்கப்பட்டுள்ளார். திரைப்பட இயக்குனரான இவர், சென்னை, மதுரவாயலைச் சேர்ந்தவர்.
இவர், மனு தாக்கல் செய்வதற்கு முன் நேற்று மதியம் 12.00 மணிக்கு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நிர்வாகிகளின் பைக்குள் படைசூழ, ஜீப்பில் ஊர்வலமாக கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தை வந்தடைந்தார்.
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மற்றொரு வேட்பாளர்
மக்கள் புரட்சி கழகம் வேட்பாளர் ராஜ்குமார், விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இவர், இந்த கட்சியின் மாவட்ட தலைவர். திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்தவர்.

