/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்குகள் மோதி 2 பேர் பலி கண்டாச்சிபுரத்தில் பரிதாபம்
/
பைக்குகள் மோதி 2 பேர் பலி கண்டாச்சிபுரத்தில் பரிதாபம்
பைக்குகள் மோதி 2 பேர் பலி கண்டாச்சிபுரத்தில் பரிதாபம்
பைக்குகள் மோதி 2 பேர் பலி கண்டாச்சிபுரத்தில் பரிதாபம்
ADDED : ஆக 12, 2024 04:39 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல் மகன் சக்திவேல், 28; இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் கண்டாச்சிபுரம் நோக்கி தனது பல்சர் பைக்கில் நண்பர்கள் சிவா, 29; மஞ்சுநாதன், 33; ஆகியோருடன் சென்றார்.
விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், கண்டாச்சிபுரம் அருகே தும்பரமேடு என்ற இடத்தில் வந்தபோது, திருவண்ணாமலை நோக்கி சென்ற கெடார் அடுத்த கொண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் கிரிதரன், 24; ஓட்டிவந்த சுசுகி பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் சக்திவேலின் நண்பர்கள் மற்றும் கிரிதரனுடன் பைக்கில் வந்த அவரது நண்பர் பிரதீப், 20; ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கண்டாச்சிபுரம் போலீசார், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே சக்திவேல், கிரிதரன் இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்த கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் இறந்த சக்திவேலுக்கு திருமணமாகி 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர்.
கிரிதரனின் தந்தை இறந்து ஒரு மாதம் ஆவதற்குள் கிரிதரன் விபத்தில் இறந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.