/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்
/
காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்
காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்
காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்
ADDED : மே 01, 2024 01:34 AM

விழுப்புரம், : விழுப்புரம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை காரில் கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் ரயில்வே கேட் அருகே விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12:00 மணிக்கு, அந்த வழியாக வந்த ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காரில் வந்த 2 பேரை பிடித்து, அவர்களிடமிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கோயம்புத்துார், சரவணாதி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் பூபதி, 24; திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கொள்ளைப்பட்டி காலனியைச் சேர்ந்த ராஜ் மகன் பிரேம்குமார், 28; என்பதும், இவர்கள், புதுச்சேரியிலிருந்து, மதுபாட்டில்களை வாங்கிச் சென்று, கோயம்புத்துாரில் உள்ள வாடகை கார் டிரைவர்களிடம் விற்பதற்காக எடுத்துச்சென்றது தெரிய வந்தது.
கடத்தல் மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், வழக்குப் பதிந்து, பூபதி, பிரேம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.