/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பினர் மோதல் 2 பேர் கைது
/
இரு தரப்பினர் மோதல் 2 பேர் கைது
ADDED : ஏப் 23, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : காணையில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.
காணையைச் சேர்ந்தவர்கள் அப்பு என்கிற ஆனஸ்ட்ராஜ், 29; மார்க்ஜான், 23; லுார்துசாமி, 53; ஆகியோர் கடந்த 20ம் தேதி 16 வயது சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். சிறுமியின் உறவினர் பெண் தட்டிக்கேட்டபோது அவரையும் அவரது கணவரையும், சிறுமியையும் உறவினர்கள் பிரசாந்த், கிருபாராஜ் ஆகியோரை தாக்கினர்.
இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், 8 பேர் மீது வழக்குப் பதிந்து மார்க் ஜான், கிருபாராஜ், 42; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

