/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிம் கார்டு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவலில் கைது
/
சிம் கார்டு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவலில் கைது
சிம் கார்டு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவலில் கைது
சிம் கார்டு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவலில் கைது
ADDED : ஆக 09, 2024 04:35 AM

விழுப்புரம்: போலி சிம் கார்டு மூலம் ஆன்லைன் மோசடி வழக்கில் சிக்கிய 2 வாலிபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அடுத்த சித்தணியைச் சேர்ந்தவர் வெண்ணி, 21; ஸ்வீட் ஸ்டாலில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜ், அன்பரசு, சதீஷ்குமார், தமிழ்ச்செல்வன், சத்தியமூர்த்தி, கிருபா ஆகியோர், வெண்ணியிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு, , அவரது பெயரில் சிம்கார்டுகள் வாங்க உதவி கேட்டனர். அவர் ஒப்புக் கொண்டதும் வெண்ணியின் ஆதார் கார்டு மற்றும் அவரது விரல் ரேகையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர்.
இந்த சிம்கார்டுகளை பயன்படுத்தில ஆன்லைனில் பண மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த வெண்ணி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த ஜூன் 17ம் தேதி கிருபா, ராஜ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் ஈடுபட்டனர்.
இந்த மோசடிக்கு மூலக்காரணமாக செயல்பட்ட கிருபா,24; ராஜ்,29; ஆகியோரை எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையை ஏற்று இருவரையும் கணினி வெளிச்சட்ட குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று கடலுார் மத்திய சிறையில் உள்ள கிருபா, ராஜ் ஆகியோரிடம் வழங்கினர்.