செஞ்சி இரண்டு குழந்தைகளுடன்: னைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சுபலட்சுமி, 30; இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 9 வயதில் கோகுல்ராஜ் என்ற மகனும், 7 வயதில் சிந்துஜா என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் புதுச்சேரியில் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு 8:30, மணிக்கு மனைவி, குழந்தைகளை பார்க்க சுரேஷ் மேல்சேவூர் வந்தார். வீட்டில் சுபலட்சுமியும், 2 குழந்தைகளும் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் ஒரு வழக்கு
துடுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மனைவி பாரதி, 25; இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2ம் தேதி காலை 10:00 மணிக்கு மேல்மலையனுாரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற பாரதி அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில், செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.