ADDED : ஜூலை 22, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதுார் பகுதி மின்வாரிய அலுவலகம் அருகே, டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 19; சிலம்பு, 19; ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.