/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்று கட்சியினர் 25 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் 25 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஏப் 08, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மாற்று கட்சியினர் 25 பேர் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்
செஞ்சி ஒன்றியம், சிங்கவரம் கிராமத்தில் அமைச்சர் மஸ்தான் தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தனுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க., முன்னாள் கிளைச் செயலாளர் அன்புசெழியன் தலைமையில் அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சியினர் 25 பேர் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
அவர்களுக்கு, அமைச்சர் மஸ்தான் சால்வை அணிவித்தார். வேட்பாளர் தரணிவேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜய குமார் உடன் இருந்தனர்.

