/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.2.75 கோடி விளைபொருட்கள் விற்பனை

ADDED : ஏப் 28, 2024 05:37 AM
விழுப்புரம் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், ஒரு வாரத்தில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சந்துரு செய்திக்குறிப்பு:
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நெல், கம்பு, உளுந்து, எள், வேர்க்கடலை, பனிப்பயிறு உள்ளிட்ட விளை பொருட்களை நாள்தோறும் 300 முதல் 600 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதற்கான தொகையை தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டத்தின் மூலம், விவாயிகள் தங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இச்சூழ்நிலையில், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், கடந்த வாரத்தில் மட்டும் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளைபொருட்களை, 1,025 விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர்.
கடந்த 23ம் தேதி வரை விற்பனை செய்த விவசாயிகளுக்கு தாமதமின்றி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், கொள்முதல் செய்யும் விளைபொருட்களுக்கு தாமதமாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உண்மைக்குமாறான இது போன்ற தகவல்களை விவசாயிகள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.