/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு
/
3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு
3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு
3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு
ADDED : மே 30, 2024 11:08 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல் கேட் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மேதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 7:00 மணியளவில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை, விக்கிரவாண்டி டோல் கேட் அருகே, சாலையின் வலதுபுறம் சென்டர் மீடியன் அருகே நிறுத்தியுள்ளனர்.
அப்போது பின்னால் வேகமாக வந்த கார் நின்றிருந்த கார் மீது மோதியது. இதை தொடர்ந்து பின்னால் வந்த கார் 2 கார்கள் மீதும் மோதி சாலையின் குறுக்கே நின்றது.
அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்டதால், வாகனங்கள் சாலையில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் அணி வகுத்து நின்றன.
தகவலறிந்த விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் மற்றும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் சென்னை - திருச்சி சாலையில் 25 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.