/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'
/
பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'
பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'
பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'
ADDED : மே 12, 2024 05:46 AM

மயிலம்: மயிலம் அருகே பஸ் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.
மயிலம் அடுத்த செண்டூரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 12:20 மணிக்கு திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது திடீரென பஸ் டிரைவரின் பிரேக் பிடித்தார். அப்போது இதன் பின்னால் வந்த தனியார் பஸ் அரசு பஸ் பின்னால் மோதியது.
தனியார் பஸ்சைத் தொடர்ந்து பின்னால் வந்த 3 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனங்கள் மட்டும் சிறிது சேதமடைந்தன. இதனால், போக்குவரத்து பாதித்தது.
சம்பவ இடத்திற்கு மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அந்த சாலையில் 1:20 மணி வரை போக்குவரத்து பாதித்தது.