/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளி அடித்து கொலை மனைவி உட்பட 3 பேர் கைது
/
தொழிலாளி அடித்து கொலை மனைவி உட்பட 3 பேர் கைது
ADDED : மார் 08, 2025 01:20 AM
செஞ்சி:சொத்து தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அமைந்தகரை, டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் லோகநாதன், 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, 32; இரு மகள்கள் உள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன் மனைவியுடன் செஞ்சி அடுத்த வௌாமை கிராமத்தில் மாமனார் ஆதிமூலம் வீட்டிற்கு வந்த லோகநாதன், சொத்து கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கடந்த, 6ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு சொத்து கேட்டு தகராறு செய்த லோகநாதனை, ஆதிமூலம், அவரது மகன் மணிகண்டன், 35, ஆகியோர் தாக்கினர். படுகாயமடைந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையை மறைத்த கல்பனா, கணவர் உடலை அடக்கம் செய்ய டி.பி.சத்திரத்திற்கு கொண்டு சென்றார்.
தகவலறிந்த வி.ஏ.ஓ., தமிழ்வாணன், 21, புகாரில், போலீசார் வழக்கு பதிந்து, டி.பி.சத்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லோகநாதன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆதிமூலம், மணிகண்டன், கல்பனா ஆகியோரை அனந்தபுரம் போலீசார் கைது செய்தனர்.