/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல் கம்யூ., கட்சியினர் 346 பேர் கைது
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல் கம்யூ., கட்சியினர் 346 பேர் கைது
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல் கம்யூ., கட்சியினர் 346 பேர் கைது
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல் கம்யூ., கட்சியினர் 346 பேர் கைது
ADDED : ஆக 02, 2024 02:12 AM

விழுப்புரம்: விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை பகுதிகளில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர் 346 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, மா.கம்யூ., - இந்திய கம்யூ., இணைந்து மறியல் போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது. முன்னதாக, கம்யூ., நிர்வாகிகள் நான்கு முனை சிக்னல் அருகேவுள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக சென்னை நகராட்சி அலுவலகம் அருகேவுள்ள சென்னை நெடுஞ்சாலைக்கு வந்தனர்.
அங்கு, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமையில், மத்திய அரசின் பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.
துணைச் செயலாளர் கலியமூர்த்தி, மாநிலக்குழு திருசெல்வன், செயற்குழு மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
உடன் 68 பேரை, விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர். இதனால், சென்னை நெடுஞ்சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
திண்டிவனம்
திண்டிவனத்தில் பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு குமார், இந்திய கம்யூ., பொருளாளர் இன்பஒளி தலைமை தாங்கினர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில், இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாககுழு சரவணன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நேரு வீதியில் மறியலில்ஈடுபட முயன்றபோது, டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் தலைமையிலான போலீசார், தடுத்து நிறுத்தி 100 பேரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜான்பாஷா ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., (லெனினஸ்ட்) கட்சியினர் 89 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை
உளுநதுார்பேட்டை உழவர் சந்தை அருகே மா.கம்யூ., (லெனினிஸ்ட்) கட்சியினர் மறியலுக்காக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் ஊர்வலமாக சென்றபோது, காவல் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது வாக்குவாதம் நடந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உடன், 89 பேரை கைது செய்தனர்.