/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் டைமிங் தொடர்பாக மோதல் திண்டிவனத்தில் 4 பேர் கைது
/
பஸ் டைமிங் தொடர்பாக மோதல் திண்டிவனத்தில் 4 பேர் கைது
பஸ் டைமிங் தொடர்பாக மோதல் திண்டிவனத்தில் 4 பேர் கைது
பஸ் டைமிங் தொடர்பாக மோதல் திண்டிவனத்தில் 4 பேர் கைது
ADDED : ஜூலை 02, 2024 05:51 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் பஸ் டைமிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தனியார் பஸ் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்குள் டைமிங் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இதில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் பஸ்சை சாலையில் குறுக்கோ போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி சண்டை போட்டதால் போக்குவரத்து பாதித்தது.
இந்த மோதலில், திண்டிவனம் நாகலாபுரம் குளத்து தெருவை சேர்ந்த செக்கர் சிவா, 45; தென்புத்துாரை சேர்ந்த ஆறுமுகம், 46; ஆகியோர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக வளவனுாரை சேர்ந்த சிவசண்முகம், 38; கொடுத்துள்ள புகாரின் பேரில் ஆறுமுகம், அய்யனார் ஆகிய இருவர் மீதும் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் காட்ராம்பாக்கத்தை சேர்ந்த அய்யனார், 38; கொடுத்துள்ள புகாரின் பேரில் பாலமுருகன், சிவசண்முகம் ஆகியோர் என இரு தரப்பை சேர்ந்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இரு தரப்பு புகாரின் பேரில் போலீசார் ஆறுமுகம், அய்யனார் உள்ளிட்ட 4 பேர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோதலுக்கு காரணமான இரண்டு தனியார் பஸ்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.