/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : செப் 18, 2024 04:46 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்ட ராயநல்லுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்தியவர்கள் 9 மாட்டு வண்டிகளையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோட முன்றனர்.
போலீசார் தப்பியோடிய 4 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன், 26; மூர்த்தி மகன் சுரேஷ், 44; சந்திரன் மகன் தீர்த்தமலை, 50; கோவிந்தன் மகன் சர்வேஸ்வரன், 64; என தெரியவந்தது இதையெடுத்து நான்கு பேரை கைது செய்து 9 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்குப் பதிந்து தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.