/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா விற்ற 4 கடைகளுக்கு 'சீல்'; தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு

ADDED : ஆக 02, 2024 11:35 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்ற 4 பங்க் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.
கடந்த மே மாதம், விழுப்புரம் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறை சார்பில் கூட்டு சோதனை நடத்தி, பல்வேறு பெட்டிக் கடைகளில் குட்கா விற்றவர்களை, கையும், களவுமாக பிடித்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், பெட்டிக்கடைகளில் குட்கா விற்று வழக்குப் பதிந்த நபர்களில் விழுப்புரம் வடக்கு தெரு காஜாமொய்தீன், முத்தோப்பு சுகுமார், நாப்பாளைய தெரு லில்லி, கீழ்ப்பெரும்பாக்கம் ராஜேஸ்வரி ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, விழுப்புரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் மற்றும் போலீசார் முன்னிலையில், நேற்று காஜாமொய்தீன் உட்பட 4 பேரின் கடைகளையும் மூடி சீல் வைத்து, நோட்டீஸ் ஒட்டினர். மேலும், 4 கடைகளுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.