/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னையை சேர்ந்த 5 பேரை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை: 11 பேரிடம் விசாரணை செஞ்சி அருகே பரபரப்பு
/
சென்னையை சேர்ந்த 5 பேரை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை: 11 பேரிடம் விசாரணை செஞ்சி அருகே பரபரப்பு
சென்னையை சேர்ந்த 5 பேரை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை: 11 பேரிடம் விசாரணை செஞ்சி அருகே பரபரப்பு
சென்னையை சேர்ந்த 5 பேரை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை: 11 பேரிடம் விசாரணை செஞ்சி அருகே பரபரப்பு
ADDED : ஆக 09, 2024 04:38 AM
செஞ்சி: செஞ்சி அருகே குறைந்த விலையில் தங்கம் வாங்க வந்த சென்னையை சேர்ந்த 5 பேரை நிர்வாணப்படுத்தி ரூ.7.70 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த 11 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, ராமாபுரத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம்,37; ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன் 7 சதவீதம் விலை குறைவாக தங்கம் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில் பேசியவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை கருப்பசாமி மகன் ஜான்கென்னடி (எ) பரத்,36; என்றும், தங்கம் வாங்க 7ம் தேதி பணத்துடன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு வருமாறு கூறினார்.
அதனை நம்பிய முகமது இப்ராஹிம் தனது நண்பர்களான பழைய வண்ணாரப்பேட்டை முஸ்தபா,32; அக்பர்அலி,36; ராயபுரம் ஜாபர் அலி,32; பிராட்வே டேவிட்,45; ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு ரூ.7.70 லட்சம் பணத்துடன் காரில் செஞ்சிக்கு வந்து, ஜான் கென்னடிக்கு போன் செய்தார்.
அதற்கு அவர், தங்கம் இன்னும் வரவில்லை. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டிக்கு வருமாறு கூறினார். அங்கு சென்றதும் காரில் ஏறிய ஜான் கென்னடி, சொக்கனத்தல் கிராமத்திற்கு போகுமாறு வழி காட்டினார்.
அப்போது பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள், முகமது இப்ராஹிம் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி, அனைவரையும் அதே பகுதியில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு அழைத்து சென்றனர். அதற்குள் மேலும் சிலர் பைக்குகளில் அங்கு வந்தனர்.
பின்னர் ஜான்கென்னடி மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள், முகமது இப்ராஹிம் உள்ளிட்ட 5 பேரையும் தாக்கி நிர்வாணப்படுத்தி மொபைல் போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து கொண்டு முகமது இப்ராஹிம் வைத்திருந்த ரூ.7.70 லட்சம் பணம், அவர்கள் அணிந்திருந்த 5 சவரன் நகைகள், 30 கிராம் வெள்ளி நகைகள், 3 மொபைல் போன்களை பறித்து கொண்டு, இதுகுறித்து வௌியே கூறினால் நிர்வாண படங்களை சமூக வலைதளத்தில் வௌியிடுவதாக என மிரட்டிவிட்டு கார் மற்றும் பைக்குகளில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து முகமது இப்ராஹிம் நேற்று காலை சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று மதியம் செஞ்சி அடுத்த கடலாடிகுளத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, கார் மற்றும் 2 பைக்குகளில் வந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஜான் கென்னடி மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.