/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னையை சேர்ந்த 5 பேரை நிர்வாணப்படுத்தி கொள்ளை
/
சென்னையை சேர்ந்த 5 பேரை நிர்வாணப்படுத்தி கொள்ளை
ADDED : ஆக 09, 2024 02:36 AM
செஞ்சி:சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம், 37; ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.
இவர், சில தினங்களுக்கு முன், 7 சதவீதம் விலை குறைவாக தங்கம் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில் பேசியவர், கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பரத், 36, என்றும், தங்கம் வாங்க 7ம் தேதி பணத்துடன் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு வருமாறு கூறினார்.
நம்பிய இப்ராஹிம் தன் நண்பர்களான பழைய வண்ணாரப்பேட்டை, முஸ்தபா, 32, அக்பர்அலி, 36, ராயபுரம் ஜாபர் அலி, 32, பிராட்வே டேவிட், 45, ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, 7.70 லட்சம் ரூபாய் பணத்துடன் காரில் செஞ்சி வந்து, ஜான் கென்னடிக்கு போன் செய்தார்.
அவர்கள் காரில் ஏறிய ஜான் கென்னடி, சொக்கனத்தல் கிராமத்திற்கு செல்லுமாறு கூறினார்.
அப்போது, பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள், இப்ராஹிம் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி, அனைவரையும் அதே பகுதியில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு அழைத்துச் சென்றனர். சிலர் பைக்குகளில் அங்கு வந்தனர்.
ஜான் கென்னடி மற்றும் அவரது கும்பல், இப்ராஹிம் உள்ளிட்ட ஐந்து பேரையும் தாக்கி, நிர்வாணப்படுத்தி மொபைல் போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து, பணம், அணிந்திருந்த நகைகள், மொபைல் போன்களை கொள்ளையடித்தனர்.
சத்தியமங்கலம் போலீசார் இது தொடர்பாக, 11 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.